ஹவுரா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் லாரிகள், பைக்கள் உள்ளிட்ட வாகனங்களை எதிர்த் தரப்பு தீயிட்டுக் கொளுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 11 நாட்களுக்கு முன்னர், ஏப்.6ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு கோஷ்டிப் பகையாளிகளான வினய் சிங் மற்றும் ப்ரதீப் திவாரி இருவருக்குமிடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. ரயில்வே யார்ட்டில் ஒப்பந்தம் தொடர்பாக இருதரப்புக்கும் விரோதம் மூண்டதாகத் தெரிந்தது. அப்போது இரு தரப்பும் சுட்டுக் கொண்டதில் வினய் சிங்கின் தம்பியும் மருமகனும் படுகாயம் அடைந்தார். அப்போது நடந்த மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட வினய் சிங்கின் தம்பி வினோத் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொல்கத்தாவின் ஹவுரா பகுதியில் கடைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அவர்களின் அடாவடிக்கு பயந்து, பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அப்போது, அப்பகுதியில் வந்த 7 லாரிகள், ஒரு கார் என தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறை தலைவிரித்தாடவே, ஏப்.6ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, வியாபாரிகள் திடீர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிணமுல் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கடைகள் சூறை; கட்சியினர் வாகனங்கள் தீக்கிரை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari