பாஜக., எம்.பி.க்கள் கூட்டத்தில் உறுப்பினர் வரிசையில் அமர்ந்த மோடி! வைரலாகும் படம்!

Published:

modi in bjp party campaign1 - 2026

பாஜக., எம்.பி.க்களுக்கான நன்னடத்தை பயிற்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்திருந்த படம் இன்று சமூகத் தளத்தில் வைரலானது. இதுதான் பாஜக., என்று பலரும் கருத்து எழுதி பகிர்ந்து கொண்டனர்.

ஒழுக்கம், நடத்தை, நாடாளுமன்ற நெறிமுறைகளைப் பின்பற்றுதல், கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பாஜக., எம்பி.,க்களுக்கு வகுப்பு நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பயிற்சி கருத்தரங்கு, கூட்டம் நடத்த முடிவு செய்தது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு “அப்யாஸ் வர்கா” என்று பெயரிடப் பட்டுள்ளது.

அதன்படி, இரு நாள் பயிற்சி வகுப்பு ஆக.3 சனிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் பயிற்சி வகுப்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது.

காலையில், கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவின் உரையுடன் இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கியது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உறுப்பினராக கலந்து கொண்டு, வரிசையில் அமர்ந்திருந்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

பின்னர் இந்தப் பயிற்சி வகுப்பில் மாலை நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு குறித்து அமித்ஷா உரையாற்றினார். ஞாயிறு நாளை பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப் பட்டது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பாஜக., எம்பி.,க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது

modi in bjp party campaign - 2026இரண்டாவது முறையாக அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சி எம்பி.,க்கள் அனைவரும் ஒழுக்கமுடனும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரிய துறை அமைச்சர்கள் அந்த நேரத்தில் அவையில் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார் பிரதமர் மோடி. அதனைப் பழக்கப் படுத்துவதற்காகவே இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறதாம்.

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜக., உறுப்பினர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால், இத்தகைய பயிற்சி வகுப்பு தேவை என்று கட்சி கருதுகிறது. முன்னதாக, 2014ல் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற போதும் இதே போன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

அண்மைக் காலமாக பாஜக., உறுப்பினர்கள் சில சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். பேச்சு, தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவப்பெயரை சம்பாதிக்கின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பாலியல் புகார்களில் சிக்குவது, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது என முறையற்ற வகையில் ஈடுபட்டு அவப்பெயரை வாங்குவதைத் தவிர்க்கவும் இந்தப் பயிற்சி பயன்படும் என்று கூறப் படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img