எதிர்ப்பாட்டு பாடும் காங்கிரஸின் அயோக்கியத்தனம்!

உரத்த சிந்தனை கட்டுரைகள் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

khulam nabi azad - 2026

#வெட்கமில்லா_காங்கிரஸ் – அரசியல் அமைப்புச் சட்டம் 35A, 370 ஆகியன தாற்காலிக ஏற்பாடு என்பதே சட்டதை நிர்ணயித்தவர்களின் நிபந்தனை. அவை ரத்து செய்ய்ப்படும் காலம் தானாக உருவாகாது. காங்கிரஸ் அதனை உருவாக்கவும் முயற்சிக்கவில்லை.

மாறாக மறைமுகமாக பல்வேறு கமிட்டிகள் மூலம் பிரிவினையை ஆதரித்து வந்துள்ளது. தேசத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் துணை போக சல்மான் குரஷித்தும் மணி சங்கர் ஐயரும் முயற்சிக்க ப.சிதம்பரமோ ஜம்மு காஷ்மீர் பிரிவினைக்கு சாமரம் வீசி வந்தார். இதற்காகவே மக்களால் இன்று இவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

ghulamnabiazad letter - 2026இந்த நிலையில் இன்று தாற்காலிகச் சட்டம் நீக்கப்பட காலகட்டம் உருவாக்கப்பட்டு, உலக நாடுகள் நமது நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வேளை வந்துள்ளது. இவ்வேளையில் காங்கிரஸ் கட்சி இப்படி எதிர்ப்பாட்டு பாடுவது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, தேசவிரோதமும் கூட. இவ்வறிக்கை காங்கிரஸ் தனது தேசவிரோதத்தை வெளிப்படுத்துவதில் வெட்கம் அற்று போய் விட்டதைத்தான் நிரூபிக்கிறது.

தாற்காலிக ஏற்பாடு ஒன்று நீக்கப்பட உள்ள நிலையில் ஒரு தேசபக்தக் கட்சி அதற்கு ஒத்துழைப்பு அல்லவா வழங்க வேண்டும் ?

  • நாராயணன் திருப்பதி (பாஜக., பிரமுகர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.