உணவுக்கு ‘மதம்’ உண்டு! மாடு, பன்றி இறைச்சிகளை விநியோகிக்க மறுக்கும் ‘ஸொமாடோ பாய்ஸ்’!

Published:

zomato2 - 2026

‘ஸொமாடோ டெலிவரி பாய்ஸ்’ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வாடிக்கையாளருக்கு விநியோகிக்க மறுக்கிறார்கள்! காரணம், அவை இரண்டும் ‘மத உணர்வுகளை’ காயப்படுத்துகிறது என்று கூறுகின்றனர். எனவே,உணவுக்கு மதம் இருப்பதை ஸொமாட்டோ பாய்ஸ் உறுதிப் படுத்தியுள்ளனர்.

மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள ஸொமாடோ பாய்ஸ் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், ஸொமாடோ நிறுவனம் மூலம் அவர்கள் விநியோகிக்கும் உணவு வாடிக்கையாளர்களின் மற்றும் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேற்கு வங்கம்: மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வழங்குவதை எதிர்த்து ஹவுராவில் உள்ள ஸொமாடோ உணவு விநியோக நிர்வாகிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், “நிறுவனம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை, எங்கள் விருப்பத்திற்கு எதிராக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வழங்கும்படி கட்டாயப்படுத்துகிறது. நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கி இப்போது ஒரு வாரம் ஆகிறது.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

zomato - 2026இந்த வாரம் திங்கள் கிழமை நாளை கொண்டாடப்படவுள்ள பக்ரித் அல்லது ஈத் அல்-ஆதா பண்டிகை கொண்டாட்டங்களின் போது இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஸொமாடோ டெலிவரி பாய்ஸ், மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சியை வாடிக்கையாளருக்கு விநியோகிக்க மறுத்துவிட்டனர்.

அவர்கள் தங்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஒன்று சம்பள உயர்வு,
மற்றொன்று நிறுவனம் தங்கள் ஊழியர்களின் மத உணர்வோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

இது குறித்து ஊழியர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

ஸொமாடோ உணவு விநியோக ஊழியரான மௌஸின் அக்தர் கூறுகையில், “அண்மையில் சில முஸ்லிம் உணவகங்கள் ஆன்லைன் உணவு விநியோக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களிடம் சில ‘இந்து டெலிவரி பாய்ஸ்’ உள்ளனர், அவர்கள் மாட்டிறைச்சி உணவை வாடிக்கையாளருக்கு விநியோகிக்க மறுக்கிறார்கள். சில நாட்களில் நாங்கள் பன்றி இறைச்சியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறோம். அப்போது நாங்கள் அதை விநியோகிக்க மறுக்கிறோம்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

நாங்கள் பண ரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்கிறோம், குறைந்த மருத்துவ வசதிகளையும் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் நம் மதத்தால் அனுமதிக்கப்படாத உணவை வழங்க வேண்டியிருப்பதால் எங்களுக்கிடையிலான சகோதரத்துவ பிணைப்பைத் தடுக்கின்றன. எங்கள் மத உணர்வு புண்படுத்தப்படுகிறது. நிறுவனத்திற்கு எல்லாம் தெரியும், ஆனால் எங்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.” என்றார்.

மற்றொரு டெலிவரி பாய் இது குறித்து பதிலளித்த போது, இந்தத் தொழிலானது, தாங்கள் மதங்களின் கோட்பாட்டுக்குள் வராது என்கிறார்.


ஹவுராவில் உள்ள ஒரு ஸொமாடோ உணவு விநியோக ஊழியர் ஒரு இந்துவாக தனக்கு முஸ்லிம் சகாக்களுடன் பணியாற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை என்கிறார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஸொமாடோ, இப்போது புதிய உணவகங்களுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கடைகளைத் திறந்து விரிவாக்கி வருகிறது. இதில், இவ்வாறு உணவு விநியோகத்தில் தயக்கம், மறுப்பு என்று பணியாளர்கள் எழுப்பும் தகராறுகளை தடுக்கிறது. “எங்களில் எவரேனும் எந்தவொரு குறிப்பிட்ட உணவையும் வழங்க மறுத்தால், இது மறுப்பு தகராறின் கீழ் வரும், இது மேலாளரால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரு ஹிந்துவாக இந்தச் சிக்கலை நாம் எதிர்கொள்வது போலவே, முஸ்லிம்களும் சமமாக இந்தச் சிக்கலை உணர்கிறார்கள். ஸொமாடோ நிறுவனம் எங்கள் மத உணர்வை புண்படுத்துகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே திங்கள் முதல் நாங்கள் எங்கள் சேவையை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம், ”என்றார் ஒரு பணியாளர்.

மேற்கு வங்க அமைச்சரும், ஹவுராவிலிருந்து தேர்வான திரிணமுல் எம்.எல்.ஏ.வுமான ராஜீப் பானர்ஜி இந்த விவகாரத்தில் விநியோக ஊழியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்! “இதுபோன்ற செயலைச் செய்யும் இந்நிறுவனம், அவர்களின் நடவடிக்கை குறித்து மீண்டும் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எந்த ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் மதத்தின் விதிகளுக்கு எதிராக செயல்பட கட்டாயப்படுத்தக்கூடாது. இது மிகவும் தவறு. இதுபோன்ற செயல்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எங்களை அணுகினால், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸொமாடோ அண்மையில் தவறான செயல்பாடுகளுக்காக செய்திகளில் அடிபட்டது. ஜூலை 31 அன்று அதன் பொதுத் தொடர்பு விவகாரம், சமூகத் தளங்களிலும் செய்திகளிலும் அடிபட்ட நிலையில், அந்நிறுவனம் பரிதாபமாக தங்கள் கருத்தில் இருந்து பின்வாங்கியது. அப்போது ஸொமாடோ ஒரு பெரிய சர்ச்சையின் மையத்தில் சிக்கிக் கொண்டது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

‘டெலிவரி பாய்’ ஒரு முஸ்லீம் என்பதால் தனது ஆர்டரை ரத்து செய்யக் கோரிய அதன் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு பதிலளித்து டிவிட்டர் பதிவு செய்தது ஸொமாடோ! அதில், அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டி, “உணவுக்கு மதம் இல்லை” என்று கூறியது.

ஸொமொடோவின் இந்தச் செயலால் மக்கள் ஆத்திரமடைந்தனர். பலர் சமூகத் தளங்களில் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். இதை அடுத்து ஸொமாடொ நிறுவனத்துக்கு எதிராக பலரும், அந்த ஆப்.,பினை தங்கள் மொபைல் போனில் இருந்து டெலிட் செய்யுமாறு கோரினர். இதை அடுத்து பலரும் ஸொமாடோ செயலியை தங்கள் மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்தனர். இந்நிலையில் ஸொமாடோ நிறுவனத்தின் வியாபாரம் பெரிதும் அடிவாங்கியது.

ஸொமாடோ நிறுவனம், இவ்வாறு இந்து வாடிக்கையாளருக்கு ஒரு பெரும் விளக்கத்தை வழங்கியதை வெறுப்புடன் பார்த்தனர் அதன் வாடிக்கை யாளர்கள். ஒரு ஹிந்து வாடிக்கையாளருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கி, பாசாங்குத் தனத்துடன், ஹலால் இறைச்சி என்று விளம்பரம் செய்து, ஒரு சமூகத்தின் முன் சிரம் பணிந்து கிடந்ததை வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு மோதல் ஸொமாடோ நிறுவனத்துக்குள் ஏற்பட்டுள்ளது; இம்முறை அதன் டெலிவரி பாய்ஸ் மூலம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img