‘ஸொமாடோ டெலிவரி பாய்ஸ்’ மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வாடிக்கையாளருக்கு விநியோகிக்க மறுக்கிறார்கள்! காரணம், அவை இரண்டும் ‘மத உணர்வுகளை’ காயப்படுத்துகிறது என்று கூறுகின்றனர். எனவே,உணவுக்கு மதம் இருப்பதை ஸொமாட்டோ பாய்ஸ் உறுதிப் படுத்தியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள ஸொமாடோ பாய்ஸ் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், ஸொமாடோ நிறுவனம் மூலம் அவர்கள் விநியோகிக்கும் உணவு வாடிக்கையாளர்களின் மற்றும் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேற்கு வங்கம்: மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வழங்குவதை எதிர்த்து ஹவுராவில் உள்ள ஸொமாடோ உணவு விநியோக நிர்வாகிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், “நிறுவனம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை, எங்கள் விருப்பத்திற்கு எதிராக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை வழங்கும்படி கட்டாயப்படுத்துகிறது. நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கி இப்போது ஒரு வாரம் ஆகிறது.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வாரம் திங்கள் கிழமை நாளை கொண்டாடப்படவுள்ள பக்ரித் அல்லது ஈத் அல்-ஆதா பண்டிகை கொண்டாட்டங்களின் போது இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஸொமாடோ டெலிவரி பாய்ஸ், மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சியை வாடிக்கையாளருக்கு விநியோகிக்க மறுத்துவிட்டனர்.
அவர்கள் தங்கள் சார்பில் இரண்டு க