வைரமுத்து மீது இந்த சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் வைரமுத்துவே காணொளித் திரையில் தோன்றி, தயவு செய்து நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போதே முடிவு செய்யாதீர்கள்! நீதிமன்றம் சொன்ன பிறகு நம்புங்கள் என்று கதற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைரமுத்து அடிவருடிகளும் கூட, ஆண்டாள் நாச்சியார் நேரில் வந்து சொல்லட்டும் நம்புகிறோம்; சின்மயி என்னும் ஒருத்தி சொல்லிவிட்டால் உடனே வைரமுத்து தவறு செய்வதாக ஆகிவிடுமா?
இப்படி யார் வேணுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் பழி போடலாம். அவதூறு பரப்பலாம். அதுவும் தப்பு நடந்து பல வருடங்கள் கழித்து.! என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் அவதூறான கொச்சை வார்த்தைகளை பொதுவெளியில் பரப்பி, நாங்கள் அப்படிப்பட்டவர்கள்தான் என்று தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
தவறு நடந்தபோதோ அதற்கு சில வருடங்கள் பிறகோ சொல்லாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். Survival, threat high places , political என்று. இன்று காலம் கனிந்திருக்கலாம். அதனால் ஒரு விஷயம் பல வருடங்களுக்குப் பிறகு வெளி வருகிறது என்பதனாலேயே அது பொய்யாகாது.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஒருவர் மீது பழி விழுந்தால் சமுதாயம் என்ன சொல்லும்..?
இவர் அப்படிப்பட்டவர் இல்லை. செய்திருக்க மாட்டார் என்று இவர் மதிப்பு பேசும், நண்மதிப்பு இருந்தால்.!
வைரமுத்து விஷயத்தில் இவருக்கு வேண்டியவர்களே அப்படிச் சொல்லவில்லை. ஆதாரம் இருக்கா, இவ்வளவு வருஷம் ஏன் சொல்லவில்லை, சின்மயி புகழுக்காக ஆதாயத்துக்காக கூச்சலிடுகிறார் என்கிறார்கள்.!
ஆக, வைரமுத்து மீது நம்பிக்கை இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது. சின்மயி மட்டுமா சொல்லி இருக்கிறார் என்றால் இல்லை. இன்னும் சிலரும் சொல்லி இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சரி , வைரமுத்து எப்படிப்பட்டவர்? இவர் பேச்சில் ஹிந்துக்களுக்கு எதிராக த்வேஷம் இருக்கும்! பெண்மையை மதிக்காதவர் என்று இவர் வாழ்க்கை சொல்லும்.
ஆதாரமற்று போகிற போக்கில் பேசுபவர் என்று சமீபத்திய நிகழ்வுகள் தெளியப்படுத்தும். சரி அப்போ அவர் எப்படிப்பட்டவர் என்று எப்படி எடை போடுவது?
/
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! – கவிஞர் வாலி.
ஊர் சொல்ல மறுக்கிறது! அதற்கு அவரே விடை தந்தார் அன்று! ஆண்டாளே நேரில் வந்து சொல்லட்டும் என்று!
ஆம் ! ஆண்டாள் நாச்சியாரே நேரில் வந்து சொல்லட்டும்! நீ நிரபராதி என்று நம்புகிறோம் !
கருத்து: வானமாமலை பத்மனாபன்




