ஆவின் பால் விலை உயர்வு… இன்று முதல் அமலுக்கு வந்தது!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்

aavin milk - 2026

ஆவின் பால் ஒரு லிட்டர் புதிய விலை: மெஜந்தா நிற கவரில் உள்ள பால் ரூ.40, நீல நிற கவரில் உள்ள பால் ரூ.43, பச்சை நிற கவரில் உள்ள பால் ரூ.47, ஆரஞ்சு நிற கவரில் உள்ள பால் ரூ.51.

அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை இன்று முதல் உயர்கிறது. விரைவில் ஆவின் பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

கால்நடை தீவனம் உள்பட கால்நடை பராமரிப்புச் செலவுகள் உயர்ந்து விட்டதால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் விற்பனை விலை
லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவன தயாரிப்பு களான பால்கோவா, தயிர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம், பனீர் உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.