December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”

‘உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்’ இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது”
 
(“கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை’ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?)
 
–(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை)17eb84b3af187198933edebabedbcf5f radio stations guru 1 - 2025
 
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
 
ஒரு ஜோசியர், பெரியவாளை தரிசனம் செய்து கொண்டார்.
 
“பெரிய குடும்பம்,வருமானம் போறல்லே,ஜோசியம் சொல்றதிலே வரும்படி குறைவு.ரொம்ப கஷ்டம்” என்று முறையிட்டார்.
 
பெரியவா கேட்டார்கள்; “நீ உங்கப்பா இருந்த பூர்வீக வீட்டில்தானே இருக்கே?”
 
“இல்லே.அதில் என் அண்ணா இருக்கார். அதற்கு மேற்குப் பக்கம் ஒரு வீட்டில் குடியிருக்கேன்”.
 
“நீ அங்கே இருக்க வேண்டாம்.பூர்வீக கிருஹத்துக்குக் கிழக்கே,பழைய மாட்டுக் கொட்டகை இருக்கோன்னோ? அந்த இடத்திலே ஒரு குடிசை போட்டுண்டு குடியிரு”.
 
(அவர்கள் பரம்பரையாக அம்பாளைப் பூஜை செய்த குடும்பமாம். அதனால் பசு மாட்டுக் கொட்டகையில்
இருக்கச் சொன்னார்)
 
பெரியவாள் மேலும் சொல்கிறார்;
 
“எல்லாக் கிரகங்களையும் நன்னாத் திட்டறயோன்னோ, ‘உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்’ இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது.
 
“குரு என்பது பெரிய கிரகம்.தட்சிணாமூர்த்தி ஸ்வரூபம் அவரைப் போய் நீசன்,பாபி,வக்ரம் என்றெல்லாம் திட்டக்கூடாது.சனி என்பவர் சூரியனின் புத்திரன் ஈஸ்வர பட்டம் பெற்றவர் .அவரைப் போய் பாபி என்கிறே.
 
“கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை’ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?
 
“பெண் பிள்ளை ஜாதகப் பொருத்தம் பார்க்க வருகிறவர்களிடம். ‘பொருத்தமில்லை’ என்று
நிர்த்தாட்சண்யமாகச் சொல்ல வேண்டாமே… பெண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும்; பையனுக்குப் புத்திர பாக்கியம் போன்றவை கேள்விக்குறி’ என்கிற மாதிரி சொல்லி விடலாம்.
 
” முப்பது வயதாகியும் பல பெண்கள் கல்யாணம் ஆகாமல் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு வரன் ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தால் கூடியவரை நிராகரிக்காமல் பதில் சொல்லணும்….”
 
(கல்யாண விஷயத்தில் ஆண் – பெண் ஜாதகப் பொருத்தத்துக்குப் பெரியவாள் அதிக மதிப்பு கொடுப்பதில்லை.குலம்,கோத்திரம் பார்த்து மனப் பொருத்தம் இருந்தால் போதும். பழங்காலத்தில்
ஜாதகப் பொருத்த விஷயம் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை என்பார்கள்.)
 
ஜோசியருக்கு ரொம்ப திருப்தி.
 
“இனிமே பெரியவா சொன்னபடியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories