நீல நிறத்துக்கு மாறிய கடல் அலை? சென்னையில் நள்ளிரவு பரபரப்பு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

merina turn blue 1 - 2026சென்னையில் கடல் நீல நிறத்திற்கு மாறியதா? நள்ளிரவில் கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்! பரபரப்பு!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர்.

திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்​ந்தனர்.

இச்சம்பவத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.