பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தி வந்த நேரத்தில்… அம்பேத்கர் சிலை உடைப்பு: சதியை தகர்க்க ராம.கோபாலன் வேண்டுகோள்!

Published:

ramagopalan - 2026

தேசிய தலைவர்களை மதிப்பதும், சமூக ஒற்றுமை ஏற்படுத்த வேண்டியதும் அனைவரின் பொறுப்பு என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாகப் பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும். அனைவரும் அனைத்து தேசத் தலைவர்களையும் மதிக்கும் பண்பு வளர வேண்டும்.

இப்படி சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்திய சமூக விரோதிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை காரணமாக்கி இந்து சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளுவதை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

சமூகத்தில் நம்பிக்கையை அரசும், அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் ஏற்படுத்த வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

சமூக விரோதிகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். சாதி சண்டைக்குப் பின்னால் உள்ள சதியை கண்டுபிடித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

சமீபத்தில் இலங்கை மூலம் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என உளவுத்துறை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் வேளையில், இது போன்ற சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நடக்கும் சதியோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக இருக்க தமிழக அரசு தனிக் கவனம் கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. – என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img