காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும்: சு.சுவாமி!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
subramaniam swamy - 2026

பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு; காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும் என்று கூறினார் சுப்பிரமணிய சுவாமி.

நெல்லையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்னை இருந்தது என்றார். மேலும், நரசிம்மராவ் காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன் என்றார்!

காங்கிரஸ் செயற்குழு இனி திகாரில் தான் நடக்கும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காங்கிரஸ் செய்த அதிக ஊழல் தான் பொருளாதார மந்த நிலைக்குக் காரணம் என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இனி திகார் ஜெயிலில் தான் நடைபெறும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.