தென்காசி, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை பார்வையிடுகிறார் தென்மண்டல ஐஜி.,!

சற்றுமுன் தமிழகம் நெல்லை
police station sengottai - 2026
file pic

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை பார்வையிடுகிறார் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன்.

தென்காசி செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து மாவட்ட எஸ்பி மற்றும் காவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

shanmugarajeshwaran ig - 2026
தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன்

கடந்த முறை செங்கோட்டை பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதம் போன்று இந்த முறை நடந்து விட கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.

இதன் முன்னேற்பாடாக இரு மதத்தினரும் ஒன்று சேர்ந்து விழாவினை சிறப்பான முறையில் நடத்தவேண்டும் என்று தெற்கு மண்டல ஐஜி சன்முகராஜேஸ்வரன் கேட்டுகொன்டார்!

முன்னதாக, மாவட்ட எஸ்.பி., அருண் சக்தி குமார் செங்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பாரம்பரிய பாதையில், நடைபெறும். பாதையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. நகர் முழுதும் 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மதியம் 12 மணிக்கு தொடங்கி, விசர்ஜன ஊர்வலம் மாலை 5 மணிக்குள் நிறைவு பெறும்… என்று கூறினார் எஸ்.பி. அருண்சக்தி குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.