அப்பா…. அப்பாடா… தமிழிசைக்கு வாழ்த்து சொன்ன தந்தை குமரி அனந்தன்!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
tamilisai kumarianandan - 2026

தமிழக பாஜக., தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் பழுத்த காங்கிரஸ்காரர். காமராஜர் காலத்து காங்கிரஸ் காரர். அவரது மகளான தமிழிசையோ, எதிர் முகாமான பாஜக.,வில் சேர்ந்து 25 வருடங்கள் கட்சிப் பணி ஆற்றியுள்ளார். தமிழக பாஜக., தலைவராகவும் உயர்ந்த அவருக்கு திடீரென ஆளுநர் பதவியை அளித்தது பாஜக.,

இந்நிலையில் தமிழிசை தனது அரசியல் பயணம் குறித்து பகிர்ந்து கொண்ட போது, தாம் பாஜக.,வில் சேர்ந்ததால், தனது தந்தை 2 மாதங்கள் தன்னுடன் பேசக் கூட இல்லை! கடும் வருத்தத்தில் இருந்தார் என்று கூறியிருந்தார்.

தற்போது தனது மகள் ஆளுநராக பதவி ஏற்று தெலங்கானா செல்ல உள்ள நிலையில், அவருக்கு ஆசி அளித்துள்ளார் குமரி அனந்தன். அந்தப் புகைப் படத்தை தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ள தமிழிசை, தந்தையின் அன்பான ஆசீர்வாதத்தில்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.