வ.உ.சி., 148வது பிறந்த நாள்… அரசு சாபில் மரியாதை!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
voc - 2026

வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் புகழப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப் படுகிறது. திருநெல்வேலிச் சீமையில் தூத்துக்குடியில் இருந்து கொண்டு சுதந்திரக்கனலை மக்களிடம் பரப்பியவர். ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கழகத்தை நடத்தி, வணிக ரீதியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவர், பின்னாளில் ஆங்கிலேயர்களால் கொடூரமாக சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

அவரது 148வது பிறந்த தினமான இன்று, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.