
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. நல்லாசிரியராகத் திகழ்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நாளில் தங்கள் வாழ்வுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை வணங்குவதும் வாழ்த்துவதுமாய் இருக்கின்றனர் பலர். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் பரிசுகள் கொடுப்பது, மலர்க் கொடுத்துகள் கொடுப்பது என்று தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இன்று (5.9.19) தனது ஆசிரியை தனலட்சுமிக்கு சில்லரை நாணயங்களை அன்புப் பரிசாகக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.