குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர்! சுற்றுலா பயணிகள் மிகுதி!

சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam sep09 - 2026

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. கடந்த இரு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர்.

திருக்குற்றால மலை, தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த வாரங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்ததால், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப் பட்டது. அவ்வப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் படுவதும் நீக்கப் படுவதுமாக இருந்த்து.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மழை இல்லை. சனிக்கிழமை சாரல் லேசாக இருந்த நிலையில், ஞாயிறு அன்று வெய்யில் எட்டிப் பார்த்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகம் குற்றாலத்தில் குவிந்தனர்.

முகூர்த்த நாட்கள், விழாக்காலம், சிறப்பு தினங்கள் என வரிசையாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்தனர்.

mekkarai dam water - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் உள்ள மேட்டுக்கால் ஷட்டர் பழுதடைந்ததின் காரணமாக நொடிக்கு 50 கன அடி நீர் வெளியேறி வீணாகி வருகிறது. சாலையும் சேதமடைந்து உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை வட்டாட்சியர் ஓசான பெர்னாண்டோ விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-09-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 120.05 அடி
நீர் வரத்து : 1452.32 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 129.20 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 51.30 அடி
நீர் வரத்து : 169 கனஅடி
வெளியேற்றம் : 400 கன அடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.