
ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்கு பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொடுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்காவை தாலிபன்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.
டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்க தாலிபன்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும்.
டிரம்பின் இந்த செயல் அமெரிக்காவில் பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு இதன் மூலம் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களும், பொருள் இழப்புக்களும் இனி அதிகமாகும்”. இவ்வாறு தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
Trump calls off US-Taliban peace talks after Kabul attack
— ANI Digital (@ani_digital) September 8, 2019
Read @ANI Story |https://t.co/GaQma1c3x4 pic.twitter.com/VQSw3A3xM9