மு.க.ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல் இது என்று சமூகத் தளங்களில் இதனை பகிர்ந்து வருகிறார்கள். துண்டுச்சீட்டுத் தலைவனின் இந்தத் துண்டு வீடியோவைப் பாருங்க மக்கழேய் என்று டிவிட்டர் பதிவுகள் களை கட்டுகின்றன.
ஒவ்வொரு நாளும் ஸ்டாலினின் ஏதாவது ஒரு பேச்சை கட் செய்து அதில் ஏதாவது அவர் வாய்குழறிச் சொல்கிறாரா என்று சல்லடை போட்டுத் தேடி, அதனை சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு நகைச்சுவை மிளிர நாளைத் தொடங்குவதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
டிவிட்டர் பதிவுகளில் அடிக்கடி, மு.க.ஸ்டாலின் வீடியோக்கள் துண்டுத் துண்டுகளாய் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய லேட்டஸ்ட் வீடியோ உலா வருகிறது.
இதில், ரெண்டாயிரத்துல பதினெட்டு உண்டா? ரெண்டாயித்துல பத்தொன்பதுல என்ன செஞ்சி கிழிச்சீங்க என்று கேள்விக் கணைகளை அடுக்குகிறார்.
ரெண்டாயிரத்துல எத்தனை பதினெட்டு உண்டு என்று சரியாகக் கணிப்பவர்கள், ஸ்டாலினுக்கு பதில் சொல்லலாம்தான்!
மு.க.ஸ்டாலினின் அந்தக் காணொளி துண்டு…