நாட்டின் பிரதம ‘சேவகன்’!

kovalambeach modi1 - 2026

மகாபலிபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் குப்பைகளை கையால் சுத்தம் செய்த மோடியின் புகைப்படங்கள் வீடியோக்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் எதிரொலித்தது.

தன்னை நாட்டின் பிரதம மந்திரி இல்லை… பிரதம சேவகன் என்று சொல்லிக் கொள்ளும் மோடி, இன்று தாம் அந்த சேவையில் ஈடுபட்டு, நிரூபித்தும் காட்டினார். சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் தாம் அப்படியே இருப்பவர் என்பதைக் காட்டும் வகையில், தூய்மை இந்தியா திட்டத்தினை தாமே செயல்படுத்தியும் காட்டி வருகிறார் பிரதமர் மோடி.