December 6, 2025, 12:37 PM
29 C
Chennai

இன்றைய ‘தரமான’ ட்வீட்..! ஒரு நடிகனின் கதை..!

tweet 1 - 2025

ஒரு நடிகன் குப்பை அள்ளினால், நாளைய பிரதமர் என்பான். ஒரு பிரதமர் குப்பை அள்ளினால், நல்ல நடிகன் என்பான். (தமிழன்டா????…பகுத்தறிவுடா????) #வாட்ஸப்வாய்ஸ்

இதுதான் இன்றைய டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் அதிகம் பேரால் பகிரப் பட்ட பதிவு. ஒரு நடிகன் குப்பை அள்ளுவது போல் நடித்தால், அவனை வருங்காலப் பிரதமர் என்று ஆகா ஓஹோ என்று புகழும் தமிழக ஊடகங்கள், ஒரு பிரதமர் குப்பை அள்ளுவதை நடிப்பு என்றும் நல்ல நடிகன் என்றும் கூறுகின்றன. இதுதான் தமிழன் டிசைன்…. என்று சமூகத் தளங்களில் தமிழக பிரதான ஊடகங்களையும் திமுக., சார்பு டிவிட்டர்வாசிகளையும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.

குறிப்பாக, இலங்கை இறுதி யுத்தத்தின் போது காலை நேர சிற்றுண்டிக்கும், மதிய நேர உணவுக்குமான இடைவெளியில் ஓர் உண்ணாவிரத நாடகம் நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி உண்ணாவிரதத்தைக் கைவிட்டு விட்டதாகக் கூறி, உலகத்துக்கும், உள்ளபடியே மறைவிடத்தில் ஒளிந்திருந்த விடுதலைப் புலிகள், தமிழர்களுக்கும் சைகை கொடுத்து செய்தி சொல்லி, அவர்களை வெளியே வரவைத்து, அதன் பின்னர் கொத்துக் கொத்தாக முள்ளிவாய்க்காலிலே தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்ய வைத்த மு.கருணாநிதியைப் போல் நாடகம் நடத்தவில்லை என்று கருத்துப் பகிர்வு செய்துள்ளனர் பலர்.

drama - 2025

குறிப்பாக நடிகர் விஜய் குறித்த கருத்துகள் அதிகம் பகிரப் பட்டுள்ளன. நடிகர் விஜய் தனது தொண்டர்களுடன் கை கொடுத்துவிட்டு, அறைக்கு உள்ளே போய் டெட்டால் விட்டு கையை சுத்தம் செய்ததை நானே பார்த்திருக்கிறேன் என்று ஒரு சினிமா இயக்குனர் கூறியது பெருமளவில் சமூகத் தளங்களில் எதிரொலித்தது.

தமிழில் மிருகம், சிந்து சமவெளி, கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாமி. விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் மூன்று முறைதான் சந்தித்துள்ளோம். மூன்று முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன்.

2000-ம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து அன்றில் பறவைகள் என்ற குடும்ப பாங்கான கதையைக் கூறினேன். பிரியமானவளே பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்காக இரண்டு மணி நேரம் ஒதுக்கி கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்னை இல்ல. நீங்கள் ரஜினிகாந்த் மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க பிளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசுகிறீர்கள்.

vijay - 2025

யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும் என்று. இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள். நீங்கள் சினிமாத்துறை தாண்டி எந்த அளவில் நல்லவர் என்பது தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசிவிட்டு, அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே பார்த்தேன்.

நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய்யாக பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும். தயவு செய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போகவும். வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகன் என்ற வார்த்தை குறித்தும், பிரதமர் குறித்தும் சமூகத் தளங்களில் கருத்துகள் வெளியாகி பெரும்பாலானவர்களால் பகிரப் பட்டு வருகிறது.

Saravana Madurai@Saravan10931414 அது அந்த காலம்… இப்போ ஒரு ஒரே ஒரு அலிபாபவும் 40 திருடர்களும் 4 chaanel, 4 news paper வெச்சிக்கிட்டு IT wing , pakistan நேசம் பயன்படுத்தி பகுத்தறிவு ன்னு goback ன்னு ஊர ஏமாத்ரானுக… தமிழனுக்கு புரிய ஆரம்பித்து விட்டது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories