
சிதம்பரத்தில் ஒரு தம்பதி டூவீலரில் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கஞ்சித்தொட்டி முனை அருகே அவர்கள் வந்தபோது, 2 வாகன போலீசார் அவர்களை வழிமறித்துள்ளனர். ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், இன்னொரு போலீஸ் சார்லஸ்!
குழந்தைகளை வண்டியில் ஏற்றி வந்ததற்கு போலீசார் ஃபைன் போட்டுள்ளனர். இது சம்பந்தமாக அந்த போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் நகரில் காவலராக பணி புரியும் சார்லஸ் என்பவர் காவல் உயரதிகாரி போன்று சிதம்பரம் கஞ்சித்தொட்டி முனை அருகே உதவி ஆய்வாளர் வேல்முருகனை அருகில் வைத்துக்கொண்டு செய்கின்ற செயல்தான் இது.
காவல் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உயரதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைன் டிஜிட்டல் மெஷினை கையில் வைத்துக்கொண்டு உதவி ஆய்வாளர் முன்னிலையில் குடும்பத்துடன் வருகை தந்த ஒரு தம்பதியினரை வழிமறித்து தனக்கு தெரிந்த அறிந்த விதிமுறைகள் தான் போக்குவரத்தின் உச்சபட்ச விதிமுறைகள் என்பதாக கருதி அந்த தம்பதியினர் மன்றாடி கேட்டும் மனசாட்சி இல்லாமல் மிகுந்த அலட்சியத்துடன் அதிகார திமிருடன் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த சிதம்பரம் காவல்துறையில் இருக்கும் அனைவருக்கும் இழுக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

காவலர்கள் வாகன சோதனையின்போது உடன் தான் இருக்க வேண்டும் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் தான் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறி உடன் உள்ள காவல் உதவி ஆய்வாளர் முன்னிலையிலேயே விதிமீறல்கள் செய்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை மீறி இவர் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் வருவது குற்றம் என்று கூறியவர் ஒரு தம்பதியினர் தனது மகள்களை அழைத்துக்கொண்டு விடுமுறை தினம் என்பதால் பண்டிகை தினம் வருவதையொட்டி தன் மகள்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்க வேண்டி தருவது பெற்றோரின் கடமை என்பதை உணர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருக்கு மேல் தனது மகளையும் அழைத்து வந்தது இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிமீறிய உச்சமாக கருதி காவலர் சார்லஸ் பேசுவது மனிதாபிமானத்திற்கு உட்பட்டதாக தெரியவில்லை.
மேலும் விசாரணையில் அந்த அதிகாரி அந்த தம்பதியினரின் நடந்துகொண்ட விதம் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் மீது உள்ள நன்மதிப்பை குறைக்கும் விதமாகவே அமைந்துள்ளது
மேலும் காவலர் சார்லஸ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் மோட்டார் பெட்டி கேஸ் மட்டும்தான் கவனிப்பதாகவும் மற்ற பணிகள் அவருக்கு வழங்கப்படுவதில்லை எனவும் தெரியவருகிறது எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வழியில் செயல்படும் நபராக உள்ள காவலர் சார்லஸ் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து அவருக்கு பதிலாக வேறு காவலர்களை கொண்டு காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படாமல் பணிசெய்ய காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.