பாகிஸ்தானுக்கு செல்லும் ஹரியானாவின் தண்ணீரை தடுப்போம்: மோடி!

சற்றுமுன்
modi 1 - 2026

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்துவதற்கான பணிகள் துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஹரியானாவில் நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, இந்தியாவிற்கும், ஹரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான தண்ணீர் பாகிஸ்தானுக்கு பாய்ந்து கொண்டுள்ளது.

இனி, அந்த நீரை தடுத்து நிறுத்தி, உங்கள் வீட்டிற்கு மோடி அரசு கொண்டு வரும். இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது. ஹரியானா விவசாயிகளுக்கு சொந்தமானது.

இதனால் தான் மோடி அரசு உங்களுக்காக போராடி வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் அவர் இந்த முறை எங்களுக்கு இரண்டு வகையான தீபாவளி இருக்கும். ஒரு ‘தியா’ (மண் விளக்கு) தீபாவளி, மற்றும் ஒரு ‘கமல்’ (தாமரை) தீபாவளி. இந்த தீபாவளியை நம் மகள்களுக்கு அர்ப்பணித்து அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.