December 6, 2025, 4:51 AM
24.9 C
Chennai

செய்தி சுருக்கம்

*தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கப்படும் போது மாற்றுத்திறனாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி, திரையரங்கில் தேசியகீதம் இசைக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை; சைகைகள் செய்யக்கூடாது. திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் முன் கண்டிப்பாக திரையில் அறிவிப்பு செய்ய வேண்டும். தேசிய கீதம் இசைக்கும் போது பார்வை குறைபாடு உள்ளவர்கள் முடிந்தால் எழுந்து நிற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது*
♈??  *விநாயக்கின் கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா, பா.ஜ., எம்.பி.,யின் பேச்சு, நாட்டில் உள்ள பெண்கள் பற்றி அவர்களின் மனநிலை என்ன என்பதை காட்டி உள்ளது. இதன் மூலம் பா.ஜ.,வின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. பா.ஜ., எம்.பி.,யின் இந்த கருத்து என்னை மட்டுமல்ல துணிச்சலாக பல சவால்களை எதிர்கொண்ட இந்த நிலைக்கு முன்னேறி இருக்கும் அனைத்து பெண் பேச்சாளர்களையும் காயப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்*
♈??  *சென்னை வன்முறை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட 27 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை முதன்மை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இதேபோல் உத்தரவாத தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடாத தங்களை போலீசார் கைது செய்ததாக கூறி 27 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது*
♈??  *மருத்துவ சீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நிபந்தனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மதன் தரப்பு முடிவு செய்துள்ளது*
 
♈??    *திருச்சி மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருப்பட்டூரில் காய்ந்த மக்காச்சோளப் பயிரை காட்டி விவசாயிகள் முறையீடு செய்தனர். வறட்சியால் மக்காச்சோளப் பயிர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்*
♈??    *ஈரோடு: ஆனைமலை தோட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளை நகைக்காக கொலை செய்த வழக்கில் சரவணன், செல்வன், கணேசன், விஜயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு நல்லம்மாள், சென்னிமலை என்ற தம்பதிகள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது*
♈?? 1] *புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். புதுத்தெருவில் வீட்டில் தனியாக இருந்த பியாரிகான் என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன*
♈?? 2] *புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது*
♈?? 3] *குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தில் முக்கிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுதின விழா நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15,000 போலீசார் உட்பட தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்*
♈?? 4] *ஜல்லிக்கட்டில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது, மாணவர்கள் போராட்டம் பாராட்டத்தக்கது என்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின் சரத்குமார் பேட்டி அளித்துள்ளார். பீட்டாவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்*
♈?? 5] *மதுரை: மேலூர் தம்பதியர் கதிரேசன்- மீனாட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்துள்ளார். கதிரேசன்- மீனாட்சி பதில் தரக்கோரி வழக்கை பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்- மீனாட்சி தொடுத்த வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்*
♈?? 6] *தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். தமிழகத்தில் வன்முறை இன்றி சிறப்பாக தேர்தல் நடத்தியதற்காக ராஜேஷ் லக்கானிக்கு விருது தரப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு சமூக வலைத்தளங்களை சிறப்பாக பயன்படுத்தியதற்காகவும் ராஜேஷ் லக்கானிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ், திருச்சி ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோருக்கும் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது*
♈?? 7] *ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை கடத்திய ஷேக் அப்துல் காதர் என்பவர் கைது செய்யப்பட்டார்*
♈?? 8] *ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் திடீரென பனிச்சரிவில் சிக்கி மூழ்கியது. பனி திடீரென சரிந்து விழுந்ததால் புதைந்த வீரர்களை மீட்கும் பனி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 8 வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்*
♈?? 9] *சேவல் சண்டைக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது*
♈?? 10] *புதுச்சேரி சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
♈?? 11] *பழனியில் சுரேஷ் என்பவர் வீட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவர் தெருவில் உள்ள சுரேஷ் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்*
 
♈?? 12] *சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி*
*பாடகர் கைலாஷ் கர், பாடகி அனுராதா பட்வால், ஓய்வபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன், இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி, பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா, பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், தீபா கர்மாக்கர், விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், சமூக சேவகர் அனுராதா கொய்ராலா, எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் வீராத் கோலி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.நடன கலைஞர் பாசந்தி பிஸ்த், மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர், சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர், ஓவியர் திலக் கீதை, பீகார் ஓவியர் பயோயா தேவி, மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங், சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான், நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா, ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக், மலையாள கவிஞர் அக்கிதம், காஷ்மீர் பல்கலை., முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, களரி பயிற்சியாளர் கிரானி*
 
♈??  vishwarubam 9962023699♈??

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories