அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை 1 மாதத்தில் முறையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நேரத்தையும், வருகையையும் உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக்ஸ் வருகைப்பதிவேடு முறை நடைமுறையில் இல்லை. பதிவேட்டில் கையெழுத்திடும் பழைய முறையையே பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மருத்துவர்களின் பணி நேரம் வெளிப்படைத்தன்மை இல்லாததோடு, பணிக்கு தாமதமாக வருவது, தேவைப்படும் நேரத்திற்கு வெளியே செல்வது போன்றவை நடைபெறுகின்றன. கடந்த 2012 செப்டம்பர் 20ல் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ESI மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக்ஸ் முறையை பயன்படுத்த வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் சில மழுப்பலான காரணங்களை முன்வைத்து இம்முறை நெறியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் வருகைப்பதிவு பயோமெட்ரிக்ஸ் முறையிலேயே செயல்பாட்டில் உள்ளது. எனவே ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் பணி நேரத்தை வெளிப்படையாக்கும் பொருட்டும் 2012ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந



