
இன்று அயோத்தி நிலம் குறித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக விளங்குவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் எந்தவித சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்றும், தொடர்ந்து, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
