ஒரு வருசம் ஆயிடுச்சி… ஆனாலும் ஒண்ணும் நடக்கலே! சின்மயி கடும் வேதனை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
chinmayee - 2026

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாடகி சின்மயி வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வரும் மீ டூ இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சின்மயி. அதனைத் தொடர்ந்து டப்பிங் யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டார். சினிமாவில் பாடவும், டப்பிங் பேசவும் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டன.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் மிஸ்டர் வைரமுத்து மீது புகார் கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது. மிஸ்டர் ராதாரவியின் டப்பிங் யூனியனில் எனக்கு தடை விதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரு வருடமாக எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. ஒரு வருடமாக எல்லோரும் மற்றவர்களின் திறந்த ரகசியங்களை கொண்டாடி வருகின்றனர். இவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு தகுதியானவர்களே’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.