
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
நெல்லை புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அமைச்சர் ராஜலட்சுமி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.பி. விஜிலா சத்யானந்த், அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், புறநகர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனுக்களை வழங்கினர்.