கடைசி டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

இந்திய அணி தரப்பில் ஷஹல் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்து தரப்பில் ராய் 32 ரன்னும், ரூட் 42 ரன்னும், மோர்கன் 40 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியுடனான கடைசி டி 20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. 203 ரன் என்ற இலக்கை நோக்கித் துரத்திய இங்கிலாந்து அணி, 16.3 ஓவர் விளையாடி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்களே எடுத்து 75 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணி தரப்பில் ஷஹல் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்து தரப்பில் ராய் 32 ரன்னும், ரூட் 42 ரன்னும், மோர்கன் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்தது.