
ஆபத்தை உணராத திருநெல்வேலி மாவட்டத்தில் விசம் கலந்த நஞ்சாக மாற காத்திருக்கும் விவசாயம்.
ஆபத்தின் விழிம்பில் செட்டிக்குளம். அதை அறியாமலும், உணராமலும் உறக்கத்தில் ஊர்மக்கள். விழித்துக் கொள்வார்களா……………..?
செட்டிக்குளம் கிராமம் – திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஆழ்வார்க்குறிச்சி ரயில் நிலையத்தின் மேற்க்கு பகுதியில் அமைந்துள்ளது. இது இயற்கையான ஆறு, குளம், வயல் என எழில் நிறைந்து காணப்படும் கிராமம். இங்குள்ள மக்களின் தொழில் விவசாயமும் பீடி சுற்றுவதும் ஆகும். மக்கள் சாதி, மத வேறுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் ஒற்றுமைக்கு பெயர் பெற்ற சிறந்த கிராமம் என்றால் அது மிகையாகாது.!
செட்டிக்குளத்திற்க்கு வந்த சோதனை என்ன……………?
செட்டிக்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அதற்க்கு ஆதாரமாக விளங்குவது கடனாநதி மற்றும் அச்சன்குளம் ஆகும். இப்போ அந்த அச்சங்குளம் தண்ணீர் பாசனம் முழுவதும் விஷம் கலந்த நஞ்சாக மாற்ற ஆயுத்தம் செய்யப்படுகிறது என்பது இந்த கிராம மக்கள் யாருக்கும் தெரியாது.
எப்படி ஆபத்து சூழ்ந்தது.?
johans food Industries என்னும் உணவு பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு Food Package செய்யும் கம்பெனி சத்தம் இல்லாமல் தனது கட்டுமான பணிகளை மிக வேகமாக முடுக்கி விட்டுள்ளது. இந்த Food கம்பெனி துவங்கப்பட்டால் செட்டிக்குளம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட காத்து இருக்கிறார்கள்.
பாதிப்பு :- 1
இந்த ஆலைக்கு தேவையான அடிப்படை தண்ணீரை அச்சன்குளத்திற்க்கு செல்லும் முகதுவாரம் வழியாக இந்த கம்பெனிக்கு தேவையான தண்ணீரை பின்புறம் வழியாக கணிசமாக உறிஞ்சப்படும். இந்த ஆலையை இயக்க ஒரு நாளைக்கு லட்சக்ணக்கான லிட்டர் சுத்தமான தண்ணீர் தேவைப்படுவதால் பூமியில் இருந்து எடுத்தாலும் நிலத்தடிநீர் வெகு மோசமாக பாதிக்கப்படும்.! ஆக விவசாயத்தை நம்பியிருக்கும் அச்சங்குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்க வாய்ப்பில்லை. அனைத்தும் உறிஞ்சப்பட்டுவிடும்.( ஆதாரம் செயற்கை கோள் புகைப்படம் )
பாதிப்பு :-2
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயணம் நிறைந்த கொடிய நஞ்சு கழிவுகள் கம்பெனியின் பின்புறமாக திறந்து விடப்பட்டால் அச்சன்குளம் பாசனக்கால்வாய் வழியாக குளத்திற்க்கு மீண்டும் வந்து சேரும். விஷத்தன்மையுடன் கூடிய கழிவு நீர் எப்படி திறந்தாலும் குளத்திற்க்கு தான் வந்து சேரும். இதற்க்கு வேறு வழியே இல்லை. இதனால் பயிர்கள் அனைத்தும் கருகும் உணவு நஞ்சாகும்.!விவசாயிகள் மேலும் இறக்க நேரிடும். மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
யார் இந்த
johans food Industries.?
புகழ்பெற்ற வெளிநாட்டு Food கம்பெனியின் இந்தியாவின் பினாமி. கேரளாவை சேர்ந்த Mathew Joseph Neerackal and Annu Maria Alexander. இவர்கள் தான் டைரக்டர்களாக செயல் படுகிறார்கள். இதன் தலைமை அலுவலகம் கேரளாவில் உள்ளது.
இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் கேரளாவில் பலத்த எதிர்ப்பு உள்ளதால்; கேரள முதலைகள் எதிர்ப்பே இல்லாத தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் ஆலை பற்றிய ரகசிய விசயங்கள். கசியாமல் இருக்க உள்ளுர் ஆட்களை வேலைக்கு வைக்காமல் வெளி ஆட்களை வைத்து விறுவிறுப்பாக வேலை நடக்கிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை அந்நியர்கள் யாரும் கண்காணிப்பு செய்யாமல் இருக்க முன்னேற்பாடாக சுற்று சுவர் மிக கம்பீரமான உயரத்துடன் யாருக்கும் தெரியாதபடி எழுப்பி வருகிறார்கள் .
யார் அனுமதி கொடுத்தார்கள்.?
கோடிக்கணக்கில் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆலை விவசாயம் செய்யும் பகுதிகளுக்கிடையே நிறுவ அனுமதி வழங்கிய புண்ணியவான்கள் யார் யார்.? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுசூழல் அமைச்சகம் மூலம் முறையான அனுமதி பெற்றார்களா.? சுற்று சூழலை மாசுபடுத்தும் ஆலைக்கான கட்டுமான பணிக்காக உள்ளூர் பஞ்சாயத்து எவ்வாறு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள்.? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியது…?
எப்படி காப்பாற்ற போகிறோம்..தமிழ்நாட்டை?
கூடங்குளம் அனு உலை, பெப்சி ஆலை என எல்லாமே உரிய காலத்தில் தடுக்கப்படாமல் கை மீறிப்போய் போராட்டத்தின் மூலம் பல மனித உயிர்களை காவு வாங்கியுள்ளது என்பதைவிட நாம் தட்டிக்கேட்க முடியாமல் சாவுக்கு ஆளாகிவிட்டோம். செட்டிக்குளம் மக்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தை நாசம் செய்ய முனைந்திருக்கும் johan food கம்பெனியை எப்படி தடுக்க போகிறார்கள்.?
எதிர்காலத்தில் இந்த ஆலை மூலம் எந்த விதத்திலும் உள்ளுர்வாசிகளுக்கு கடுகளவு கூட நன்மை ஏற்பட போவதில்லை.
ஆனாலும், இது தமிழ்நாட்டில் எத்தனை செட்டிக்குளத்தான்களின் உயிரை காவு வாங்க போகிறது என்பது தெரியவில்லை.! உள்ளுர் இளைஞர்களும். அரசியல் கட்சிகளும் ஆபத்தை கவனித்து விழித்து கொள்வார்களா.? இவர்கள் காலத்தே எடுக்கும் முடிவை பொருத்தே அழிவின் தன்மைகள் அமையும்.! என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்.?



