கடைசி டி20 போட்டி: இந்தியா 202/6

ஏற்கெனவே நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளுன் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணி, தொடர் வெற்றியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர்:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 202 ரன்களைஎடுத்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பேட் செய்யப் பணித்தது துவக்க வீரர்களாகக் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2 ரன்னிலும் ராகுல் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தாலும், சுரேஷ் ரெய்னாவும் தோனியும் இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். ரெய்னா 45 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 63 ரன் எடுத்தார். தோனி 36 பந்துகளில் 2 சிக்ஸருடன் 56 ரன் எடுத்தார். பின் வந்த யுவராஜ் 10 பந்துகளில் 3 சிக்ஸருடன் 27 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 202 ரன் எடுத்து 203 ரன் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

ஏற்கெனவே நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளுன் தலா ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணி, தொடர் வெற்றியைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.