அரசியல் சாசனத்தை மீறி… பிரிவினைவாதிகளுடன் திருமா..! நீதிமன்ற நடவடிக்கை வருமா?

Published:

thirumavalavan ayodhya case meet - 2026

அயோத்தியில் முஸ்லிம் மன்னர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்ட ராமர் கோயில் மற்றும் ஆக்கிரமிக்கப் பட்ட நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்து இப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய அரசின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், அவரது மக்களவை உறுப்பினர் பதவியை பறிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்றும் இப்போது குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது குறித்த விவாதங்களும் சமூகத் தளங்களில் அதிகரித்துள்ளன. நேற்றைய ஆர்ப்பாட்ட கூட்டம் தொடர்பில் பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img