
திருமணம், அவசர மருத்துவம் உள்ளிட்ட சில பணிகளுக்காக அவசரம் கருதி செல்வோர் தற்போதைய ஊரடங்கு நேரத்தில் டிஎன் இ பாஸ் எனப்படும் அனுமதிச்சீட்டு பெற்றுசெல்லலாம். இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு…
பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு கீழ்க் குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு அவசர பயண அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது.
முன்கூட்டியே நிச்சயம் செய்த திருமணம்
அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்)
எதிர்பாரா விதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்)

அரசின் வழிகாட்டுதல் கடிதத்தின்படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதிச் சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
எனவே அவசர அனுமதிச் சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் எவரும் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
அதே நேரம், இ பாஸ் பெறப் படும் http://tnepass.tnega.org/ இணையதளத்தில், குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய காரணங்களுக்காக மட்டும் தனி நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்க விலக்கு அளிக்கப்பட்ட துறைகள் எவை எவை என்று பட்டியலையும் இந்த இணைய தளத்திலேயே தெரிவித்துள்ளது அரசு. http://tnepass.tnega.org/ https://tnepass.tnega.org/#/user/pass
எனவே, பயனர்கள் https://tnepass.tnega.org/#/user/pass தளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

