கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

Published:

11 July23 Fakher Zaman - 2026குறைந்த இன்னிங்ஸில் மிக வேகமாக 1000 ரன்களை கடந்து பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் சாதனைப் படைத்துள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் ஒருநாள் போட்டியில் 210* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதோடு மிகப்பெரிய சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

தற்போதைய கிரிக்கெட் போட்டிகளில் யார் வேகமாக ரன்கள் குவிப்பது, அதிக விக்கெட்டுகளை எடுப்பது என்ற போட்டா போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவி ரிச்சர்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக், இந்தியாவின் விராட் கோஹ்லி ஆகியோரின் பல வருட சாதனையை பாகிஸ்தானின் ஃபகர் ஜமன் முறியடித்துள்ளார்.

இவர் வெறும் 18 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

இதற்கு முன் விவி ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜொனதன் ட்ராட், குவிண்டன் டி காக் மற்றும் பாகிஸ்தானின் பாபர் அஜம் ஆகியோர் 21 போட்டிகளில் 1,000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

விராட் கோஹ்லி 24 போட்டிகளிலும், சச்சின் 34 போட்டிகளிலும் 1000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img