நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே காட்டுத் தீ போல் ஹிந்து முஸ்லீம் கலவரங்கள் பரவிக் கொண்டிருந்தது. அதைக் கட்டுப்படுத்தி முடிவிற்கு கொண்டு வர போதிய அளவிற்கு ராணுவத்தினரையோ, போலீஸையோ அனுப்ப அரசால் இயல வில்லை.
மக்களே தங்களைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை பெரும்பாலும் இடங்களில் ஏற்பட்டது. மறுபுறம் காஷ்மீரில் ஊடுருவ முயற்சித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளை தடுக்க வேண்டியது வேறு இருந்தது.
காஷ்மீர் வரலாறு பற்றி இங்கு விரிவாக கூற இயலவில்லை. சற்றே சுருக்கமாக தேசப் பிரிவினை நாட்களை ஓட்டிய நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.
ஜம்மு- காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங் என்பவரின் ஆளுகையின் கீழிருந்தது. வறண்ட பஞ்சாப் சமவெளித் தொடங்கி பனிபடர்ந்த இமயம் வரை நீண்ட பகுதி ஜம்மு- காஷ்மீர்.
84000 சதுர மைல்கள்( 217560 சதுர கிலோ மீட்டர்கள் ) கொண்ட பிரதேசம். ஆங்கிலத்தில் GREAT BRITAIN அல்லது UNITED KINGDOM என்றறியப்படும் இங்கி லாந்து,வேல்ஸ்,ஸ்காட்லாந்து,வடக்கு ஐயர்லாந்து ஆகியவற்றின் மொத்த கூட்டுப் பரப்பளவு எவ்வளவோ அவ்வளவு பரப்பளவு கொண்டது ஜம்மு- காஷ்மீர்.
ஜம்ம்-காஷ்மீர் என்றழைத்தாலும் சுற்றுலா பயணிகளைப் பொறுத்த வரை ஸ்ரீநகர் பள்ளத்தாக்குத்தான் அவர்களுக்கு முக்கியமானது. காஷ்யப முனிவர் வாழ்ந்த பூமியாகையால்,அவர் பெயர் மருவி காஷ்மீர் ஆனது.
ஸ்ரீநகர், திருமகளின் பெயர் சூடி நின்றது. மூன்று புறம் பனியடர்ந்த மலைகளின் கைக்கோப்பு. ஆகவே அதன் வழியே ஸ்ரீநகருக்குள் செல்ல வழியில்லை. திறந்து கிடந்த நான்காவது பக்கம், பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பரப்பை நோக்கி அமைந்திருந்தது.
வெளி உலகத்துடனான தொடர்பு என்பது இந்த பக்கத்தில் அமைந்திருந்த இரு சாலைகளை நம்பியே இருந்தது.
மூன்றாவதாக ஒரு சாலை இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்படாது ,மஹாராஜா ஹரிசிங் ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவிற்குச் செல்ல பிரத்யேகமாக பயன்படுத்திய ஒன்று அது. இந்த சாலைத்தான் பாரதத்துடன் நேரடி தொர்புடையதாக அமைந்திருந்தது. ஆனால் இது ஒரு முழுமையான சாலை அல்ல. மேடும் பள்ளமும் நிறைந்து, அவ்வப் போது நிலச்சரிவுகளை சந்தித்த,ஜீப் பில் மட்டுமே பயணிக்கக் கூடிய சாலை.
1955 வாக்கில் தான் மலையைக் குடைந்து பன்னிஹல் சுரங்கப் பாதை உருவாகி முழுமை பெற்றது.
1947 ல் , காஷ்மீரின் 45 லட்சம் மக்கள் தொகையில்,ஹிந்துக்கள்,சீக்கியர்கள்,புத்த மதத்தை சேர்ந்தவர்கள்,முஸ்லீம்கள் ஆகியோர் இருந்தனர்.
ஹிந்து மன்னர் ஹரி சிங் காஷ்மீர் ‘ ஆசியாவின் ஸ்விட்ஸர்லாந்தாக ‘ தனி நாடாக இருக்க வேண்டும் என்று முதலில் விரும்பினார்.
காஷ்மீரை தங்கள் நாட்டின் பகுதியாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முனைந்த போது,என்ன செயவது என்று தெரியாது திகைத்துப் போனார்.
ஏனென்றால்,காஷ்மீருக்கு வர வேண்டிய பொருட்கள் அனைத்தும் பாகிஸ்தானி லிருந்து ஸ்ரீநகரை இணைத்த இரண்டு சாலைகள் வழியாகத்தான் வர வேண்டி யிருந்தது.
பாரதத்துடன் இணைப்பாக இருந்த சாலை நம்பக்கூடியதாக இல்லை. பாகிஸ்தான், பொருட்களை கொண்டு வர தடை போட்டு விட்டால் என்ன செய்வது ? ஆகவே ஹரிசிங் வழக்கமாகச் செய்யக் கூடிய ஒன்றைச் செய்தார். பிரச்சனை ஒன்றும் இல்லை என்பது போல காலம் கடத்தினார். ஜின்னா குமுறிக் கொண்டிருந்தார்.
நேருவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சற்றும் கவலைக் கொள்ளவில்லை. காஷ்மீர் போனால் போகட்டும் எனும் மனோபாவம்தான் அவர்களுக்கு இருந்தது.
பாகிஸ்தானோடு இணைய மஹாராஜா ஹரிசிங் விரும்பினால் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அவருக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
தேசத் துரோகமே உன் பெயர்தான் காங்கிரஸா ?! நம் நாட்டின் துரதிரிஷ்டம், நாட்டின் முக்கியமான காலக்கட்டங்களில் ,நேரு போன்றவர்கள் தலைவர்களாக கோலோச்சியது தான்.
மவுண்ட்பேட்டனும், மக்கள் கருத்தை அறிந்துச் செயல்படும்படியாக மன்னருக்கு அறிவுறுத்தி விட்டு பிரச்சனையைக் கை கழுவி விட்டார். ஜின்னா ஏது செய்யாமல் சும்மா இருந்திருந்தாலே காஷ்மீர் அவர் மடியி ல் போய் விழுந்திருக்கும்.
ஆனால் ‘ நேரடி நடவடிக்கை ‘ எனும் அவரின் வழக்கமான ஆயுதத்தை கையில் எடுத்தார். ஜின்னாவை பொருத்த வரை,ஏன் முஸ்லீம்களை பொருத்தவரையும் கூட ‘ நேரடி நடவடிக்கை ‘ என்றால் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது.
அந்த ஆயுதத்தைத் தான் கையில் எடுத்தார் ஜின்னா !
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




