
ஓசூர் அருகே கூலிப்படையினரால் காரின் மீது டிப்பர் லாரி மோத வைத்தும் பெட்ரோல் குண்டு வீசியும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
சானமாவு என்ற இடத்தில் நவம்பர் 11ம் தேதி கார் மீது டிப்பர் லாரி மோதி கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டுனர் முரளி என்பவர் உயிரிழந்தார்.
சாலை விபத்தாக கருதப்பட்ட இச்சம்பவம் கூலிப்படையினரால் ஆனந்த்பாபு-நீலிமா தம்பதியை கொல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்று தகவல் வெளியானது.
காரில் பயணித்த ஆனந்தபாபு வழியில் இறங்கிவிட நீலிமாவும் அவர் மகளும் ஓட்டுனர் முரளியுடன் காரில் சென்றனர். காரில் தீப்பிடித்த நிலையில் முரளி உயிரிழந்தார்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நீலிமா பெங்களூரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவரும் நேற்று உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே கூலிப்படையினரை போலீசார் தேடி வந்த நிலையில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



