சிகிச்சையில் கமல்-ஸ்டாலின் நலம் விசாரிப்பு.!

Published:

SUDALI KAMAL 2 - 2026

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .

அப்போது காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையில் அவருக்கு காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பி அகற்றப்பட்டது

.இதனை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்ற கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img