கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில்
தனியார் சொகுசு பேருந்தில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 3360 கிராம் எடை கொண்ட 20 பார்கள் தங்கம் சிக்கின. அதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடி. நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



