சினிமா நடிகர் பாலாசிங் காலமானார்!

Published:

balasingh actor - 2026

திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடத்து புகழ்பெற்றவர் பாலாசிங்!

நடிகர் பாலாசிங் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் நடிகர் நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களில் நடித்தவர். மலையாளத்தில் அறிமுகம் ஆனாலும் குணச்சித்திர நடிகர் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார்!

புட் பாய்ஸன் காரணமாக விஜயா ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை 1மணி அளவில் இறந்தார். 10 மணிக்குப் பின்னர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தை அடுத்துள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு அவரது உடல் எடுத்துசெல்லப் படுகிறது என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தகவலுக்கு: 098414 75047 / 9952051144

Related articles

Recent articles

spot_img