பாம்பை விழுங்கும் தவளை! வைரல் வீடியோ!

frog - 2026

வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்தோனேசியாவிலிருந்து ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாது. ஆபத்தான விஷப்பாம்பு ஒன்று, அதன் உணவிற்கே உணவாகிப்போகும் வினோதம் இதில் நடக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

பாம்புக்கும் தவளைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறையும் இந்த இரண்டும் நேருக்கு நேர் வந்தால், ஒன்று இறப்பது உறுதி. ஒன்று என்று கூறுவதைவிட, தவளைதான் இறக்கும் என உறுதியாகவே கூறிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் பாம்பு (Snake) தவளையை வேட்டையாடினாலும், இந்த புகைப்படத்தில் அதற்கு மாறான ஒரு காட்சியைக் காண்கிறோம். தவளை தனது வாயில் ஒரு குட்டிப்பாம்பை பிடித்து உயிருடன் விழுங்குவதை புகைப்படத்தில் காண முடிகின்றது. இந்தோனேசியாவின் காடுகளில் இந்த அபூர்வ தருணம் பதிவாகியுள்ளது.

ராட்சத தவளை பாம்பை விழுங்கும் இந்த படத்தை புகைப்பட கலைஞர் லிஸ்டியான்டோ சுஹார்ட்ஜோ தனது கேமராவில் படம் பிடித்துள்ளார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்த அபூர்வ நிகழ்வை தன் கண்களால் பார்த்த அவர், உடனே கேமராவில் படம் பிடித்தார். இந்த புகைப்படத்தை லிஸ்டியான்டோ சுஹார்ட்ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் அனைவராலும் விரும்பப்பட்டு வருகிறது. பாம்பை தவளை வேட்டையாடுவது பொதுவான விஷயம் அல்ல. இந்த அபூர்வ தவளை ‘ஆப்பிரிக்கன் புல் ஃப்ராக்’ வகை தவளை என்று புகைப்படக் கலைஞர் லிஸ்டியான்டோ கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து அவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். பாம்புக்குட்டிக்கு அதன் அருகில் இந்த தவளை இருப்பது தெரியாமல் மாட்டிக்கொண்டது என லிஸ்டியாண்டோ கூறினார்.

இந்த வகை தவளைகள் எலிகளை வேட்டையாடுவதையும் பலமுறை பார்த்ததாக லிசாடியான்டோ கூறினார். ஒரு தவளை பாம்பை வேட்டையாடுவது இது முதல் சம்பவம் அல்ல.

இதற்கு முன்பே இதுபோன்ற ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பிப்ரவரி 2021 இல் வெளிவந்த ஒரு வீடியோவில் (Viral Video), ஒரு தவளை அதன் அளவை விட மிகப் பெரிய பாம்பை விழுங்க முயற்சிப்பதைக் காண முடிந்தது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

https://www.instagram.com/p/CXcTWnIPv3f/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories