தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’! நாளை மிக கன மழை பெய்யும்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
IMG 20191201 WA0002 - 2026

தமிழகத்தில் டிச.1 ஞாயிறு இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே, சென்னையில், வில்லிவாக்கம், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, திநகர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், மணலி, கொளத்தூர், பாடி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

red alert in tn - 2026

லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8% அதிகமாக பெய்துள்ளது… என்று வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.