இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, அரசு அதிகாரி ஒருவருக்கு டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுரேஷ் சந்திரா என்பவரது வீட்டில் டெல்லி போலீஸ் நடத்திய சோதனையில் 1.3 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க, தினகரன் தன்னிடம் பணம் அளித்ததாக அவர் கூறியதைத் தொடர்ந்து, டி.டி.வி. மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.



