பாதாம் – ஆனியன் ஃப்ரை
தேவையானவை:
பாதாம் – அரை கப் (தோல்சீவி, நீளவாக்கில் வெட்டியது)
வெங்காயம் – அரை கப், (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று (பொடி யாக நறுக்கவும்),
கடலை மாவு,
அரிசி மாவு கலவை – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் பாதாம், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.