மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு ரூ.1024 உயர்வு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
01 Oct16 gold rate - 2026

கடந்த சில தினங்களாகக் குறைந்து வந்த தங்கம் விலையில், இன்று திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மீண்டும் ஜெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.128 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1024 அதிகரித்துள்ளது.

இன்று சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் காலை நேர நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.4,153 எனவும், சவரன் ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224 எனவும் விற்பனை ஆனது. 24காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.43,540க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இதே போல், வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசு உயர்ந்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.