அப்டின்னா… அந்த கொழுப்பாவது குறையும்! கொழுக்மொழுக் குஷ்புவுக்கு காயத்ரி ரகுராம் ‘ஷொட்டு’!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை லைஃப் ஸ்டைல்
kushboo gayathri raghuram - 2026

தமிழ் சினிமா உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு, 90 களில் ரஜினி, கமல், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. கொழுக் மொழுக் என குண்டாக உடலை வைத்துக் கொண்டு, இவர் டான்ஸும் ஆடுவது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.

வட நாட்டைச் சேர்ந்தவரான குஷ்பூ, ஹிந்தியில் நடித்து பெரிதாக வரவேற்பு இல்லாத நிலையில், தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய பல மொழி திரைப் படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்தவர்.

தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வம் காட்டி திமுக.,வில் சேர்ந்தார். கொள்கையை கொள்ளை என திமுக.,வின் மேடையில் கருணாநிதி முன்னிலையில் பேசி திமுக.,வினரை கவர்ந்தார். பின்னாளில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்று, காங்கிரஸில் இணைந்து அரசியல் சேவை செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு அடிக்கடி டிவிட்டர் பதிவுகளில் ஏதேனும் சர்ச்சையைக் கிளப்புவார். தற்போது, காங்கிரஸ் நடிகை குஷ்பு பதிவிட்ட டிவிட்க்கு பாஜக., நடிகை காயத்ரி ரகுராம் ஒரு கிண்டல் பதிவினை இட்டுள்ளார். இது இப்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

kushboo gayathri raghuram - 2026

ஏற்கெனவே இருவரும் நடிகை காயத்ரி ரகுராமிற்கும், குஷ்பூவும் டிவிட்டரில் அடிக்கடி தகராறு வந்து ரசிகர்கள் மட்டுமல்லாது இரு கட்சிக்காரர்களும் உசுப்பேற்றிக் கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில், தற்போது பிரதமர் மோடி நேற்று ஒரு டிவிட் போட்டிருந்தார். அதில், வரும் மார்ச் 8 ம் தேதி, மகளிர் தினத்தன்று, தனது டிவிட்டர் பக்கத்தை சாதனைப் பெண்களுக்கு ஒதுக்கிவிடுவதாகக் கூறி யிருந்தார்.
அதற்கு முந்தைய நாள், தாம் ஞாயிறு அன்று சமூக வலைத்தளக் கணக்குகளில் இருந்து வெளியேறிவிடலாமா என்று யோசித்ததாகக் கூறியிருந்தார்.

இதற்கு பலர் கருத்து தெரிவித்தனர். மோடிக்கு ஆதரவாக பலரும் நோ சார் என்று பின்னூட்டம் இட்டனர். மேலும், இது குறித்த ஹாஷ்டாக் ஒன்றும் வைரலானது. அதே நேரம் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.

அவர்களின் வரிசையில் காங்கிரஸைச் சேர்ந்த குஷ்பு, பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைக் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார். அவரது டிவிட்டர் பதிவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டு விடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், அது நல்லது, கொழுப்பு குறையும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

https://twitter.com/gayathriraguram/status/1234713118921478144

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.