Crab
Crab

மனிதர்கள் கொடுக்கும் பிஸ்கட்டை நண்டுகள் வாங்கி உண்ணும் காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி டெல் வெடிமருந்து நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு அருகே சிறு ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையிலுள்ள நண்டுகள் மனிதர்கள் கொடுக்கும் பிஸ்கட்டை வாங்கி உண்ணும் அரியவகை காட்சி கிடைத்துள்ளது.

இதில் நண்டுகள் பாதி அளவு தண்ணீருக்கு வெளியே தனது கொடுக்கை நீட்டி பிஸ்கட்டை வாங்கி உண்ணுகின்றன.

மேலும் குரங்குகள், பறவைகள் போன்றவைகள் தான் மனிதர்கள் கொடுக்கும் உணவை கையிலிருந்து வாங்கி உண்பதை பார்த்திருப்போம். ஆனால் நண்டுகள் இவ்வாறு வாங்கி உண்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending