1.வடகத்துக்கு கூழ் காய்ச்சும்போது பால் சேர்த்துக் காய்ச்சினால் பொரித்தபின் வெண்மையாக இருக்கும்.
2.எந்த வடகத்துக்கான மாவையும் முதல்நாள் இரவு ஒரு தூக்கில் கொட்டி மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலையில் பிழிந்தால் கை எரியாது.
3. கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாள்களில் வாங்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை குழம்பிலோ ரசத்திலோ போட்டால் வாசனையாக இருக்கும். தயிர் பச்சடி செய்தால் ருசி அருமையாக இருக்கும்.
4. ஜவ்வரிசி வடகம் எப்போதுமே வாயில் ஒட்டிக்கொண்டு இம்சை செய்யும். ஜவ்வரிசியை வேக வைக்கும்போது சிறிது அரிசிமாவையும் கலந்து வேக வைத்து செய்தால், சாப்பிடும்போது வாயில் ஒட்டிக் கொள்ளாது.
5. பொடியான பழைய வடகத்தை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளுங்கள். தயிரில் பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய், உப்பு சேர்த்து கலந்து பொரித்த வடகத்தையும் போட்டுப் பரிமாறலாம்.
6. வடகத்தைப் பிழிந்து காய வைத்திருக்கும் இடத்தின் நான்கு மூலையிலும் நான்கு ஸ்டூல்களை தலைகீழாகப் போட்டு வடாமுக்கு குறுக்கும் நெடுக்குமாக நூலை நன்கு சுற்றிவிட வேண்டும். இதைப் பார்க்கும் காகங்கள் ஏதோ வலை என்று நினைத்து அருகிலேயே வராது.
7. ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
ஜவ்வரி வடகத்துக்கு தண்ணீர் அதிகமாக ஊற்றினால் கொஞ்சம் அவலை எடுத்து ஊற வைத்து அதனுடன் கலந்து விட்டால் கெட்டியாகிவிடும், சுவையும் அதிகமாகும்.
8. வடகம் காய வைக்கும்போது எடை வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லில் உள்ள மண், தூசி வடகத்தில் விழாது.
9. வடகம் வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
10. வடகத்துக்கு மாவு பிசையும்போது உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் வடகத்தை எண்ணெய்யில் பொரிக்கும்போது, உப்பு சுவை சரியாக இருக்கும்.
வடகம் செய்ய போறிங்களா? உங்களுக்காக இது!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari