கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளில் மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக் கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒன்று கூட கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்து பல்கலைக் கழக மானியக்குழு (யூஜிசி) உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளும் வரும் மார்ச் 31 வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.