கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினின் 21 வயது கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா மரணம் அடைந்தார்.
ஸ்பெயினின் அத்லெடிகோ போர்ட்டடா ஆல்டா என்ற யூத் கால்பந்து அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார் பிரான்சிஸ்கோ கார்சியா 21. இன்பான்டில் அசைடு அணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் ரத்த புற்று நோய் (‘கேன்சர்’) காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
மலாகா பகுதியில் கொரானா தொற்று காரணமாக 5 பேர் இறந்தவர். இதில் குறைந்த வயதில் மரணம் அடைந்தவர் ஆனார் கார்சியா. உலகளவிலும் குறைந்த வயதில் கொரோனாவுக்கு உயிரிழ்ந்தது கார்சியா தான்.