ஆர்.எஸ்.பாரதி மீது அளிக்கப் பட்ட புகாரில், தலைமைச் செயலர் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.
பட்டியல் சமூகத்தை இழிவாகப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. தமிழக பாஜக.,வின் எஸ்ஸி பிரிவின் சார்பில் அளித்த மனு மீது விசாரணை மேற்கொள்ளும் படி தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக., தமிழக எஸ்சி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை நடத்தும் படி, தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.