கேரளா லாரில… கோழிக்கழிவுகள அனுப்பி வெச்சானுங்க… இன்று கொரோனாவ அனுப்பிட்டிருக்கானுங்க..!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி
puliyarai check post
puliyarai check post

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரள மாநிலத்திற்கு மாநில எல்லைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று அங்கே இறக்கிவிட்டு தமிழகம் திரும்பும் வாகனங்கள் அனைத்தும் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்துக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளன.

இதில் நேற்று ஆந்திராவைச் சேர்ந்த வாகன ஓட்டி மற்றும் கிளீனர் ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிக டெம்பரேச்சர் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக அவர்கள் கேரளவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மாநில எல்லையான புளியரை பாதை வழியாக ஏராளமானவர்கள் ஊடுருவி வருகின்றனர் . இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழக அரசு விரைவாக செயல்பட்டு, தென்காசி மாவட்டம் புளியரையில் செயல்பட்டு வரும் கொரோனா கண்காணிப்பு முகாமை மலைப்பகுதியில் உள்ள கோட்டைவாசல் பகுதியில் அமைக்க வேண்டும் என்றும் அப்படி அமைத்தால் கேரளாவில் இருந்து வரும் நபர்களை கண்காணிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவீரப் படுத்தவும் வசதியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அந்த வகையில் கொரோனா தொற்று கண்காணிப்பு முகாமை கோட்டைவாசல் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.